நாம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தற்போதைய காலகட்டத்தில் செலவுகள் அதிகரித்து வருகின்றது. மேலும் எதிர்பாராத விதமாக மருத்துவ செலவுகளும் அவ்வப்போது ஏற்படும். இதனை ஈடுகட்ட நாம் ஹெல்த் இன்சூரன்ஸ் வைப்பது மிகவும் முக்கியமாகும். அத்தகைய ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றி முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியதை பின்வருமாறு விரிவாக காணலாம்.

  1. முதலில் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை சரி பார்த்து அதில் ஏதேனும் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
  2. பின்னர் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்னரே இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க் அல்லாத ஹாஸ்பிடல் களில் பணம் இல்லா சிகிச்சை பெறுவதற்கு முன்கூட்டியே நீங்கள் அங்கீகரிப்பை பெற்றிருக்க வேண்டும்.
  3. அதோடு இன்சூரன்ஸ் பாலிசியை கிளைம் செய்யும் போது பான் கார்டு, ஆதார் கார்டு, மருத்துவ அறிக்கைகள், ரசீதுகள், மருத்துவரின் பிரிஸ்கிரிப்ஷன் மற்றும் பரிசோதனை முடிவுகள் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.
  4. மேலும் அவசரகால சிகிச்சையின் போது இன்சூரன்ஸ் பணத்தை கிளைம் செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும்.