தேனி மாவட்டத்தில் உள்ள பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஆயிஷா பீவி(75) என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவர்  பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்த மூதாட்டியின் உடலை மீட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.