
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.