ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை மாற்றம் காரணமாக மழை பெய்து வரும். சவுதி அரேபியா போன்ற பாலைவன நாடுகளில் மிக குறைவான அளவில் மழை பதிவாகும். இந்த நிலையில் இதற்கு மாறாக சவுதி அரேபியாவில் பருவ மழை கொட்டி தீர்த்து வருகிறது. இரண்டே நாட்களில் 4.9 சென்டிமீட்டர் மழை. இதைத்தொடர்ந்து ஜெட்டா நகரில் 3.8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் கனமழை வெளுத்து வாங்கியது. இதில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான பொதுமக்கள் சிக்கி தவித்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த தகவலின்படி, சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணங்களில் இந்த வாரம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதில் கிழக்கு நகரங்களான அல் அஹைசா, ஜூபைல்,  அல் கோபார், தம்மாம், கதீப் ஆகிய நகரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த கனமழை காரணமாக பள்ளிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறுகின்றன, விமான நிலையங்களும் சேதமடைந்துள்ளது. இதனால் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பொது இடங்களுக்கு பொதுமக்கள் செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது.