
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளில் சிக்கி இருப்பவர்களை படகுகள் மூலம் மீட்டு முகாம்களில் தங்க வைக்கின்றனர்.
இந்நிலையில் நாகர்கோவில் வடிவீஸ்வரன் மீனாட்சி கார்டன் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மீட்பு குழுவினர் 5 குழந்தைகள் உட்பட 25 பேரை பத்திரமாக மீட்டு முகாமில் தங்க வைத்துள்ளனர். இதேபோல அஞ்சு கிராமம் பேருந்து நிலையம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.