ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து PSLV 60 ராக்கெட் வெற்றிகரமாக டிசம்பர் மாதம் 30ஆம் தேதி இரவு விண்ணில் செலுத்தப்பட்டது. PSLV 60 ராக்கெட் 220 கிலோ எடை கொண்ட ஸ்பேடெக்ஸ்- ஏ, ஸ்பேடெக்ஸ்- பி என்ற இரண்டு செயற்கைக்கோள்களை கொண்டு சென்றுள்ளது. இது குறித்து அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை அமைச்சர் ஜிஜேந்திர சிங் தனது இணையதள பக்கத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் குறித்து பாராட்டி பதிவிட்டுள்ளார்.

இதில் அவர் தெரிவித்ததாவது, இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஒன்றன்பின் ஒன்றாக சர்வதேச அதிசயங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் விண்வெளி துறையுடன் இணைந்து இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. ஸ்பேஸ் டாக்கிங் தொழில்நுட்பத்தில் இந்தியா 4ஆவது நாடாக இணைந்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாரதிய டாக்கிங் சிஸ்டம் மூலம் உருவாக்கப்பட்டது மிகவும் பெருமைப்படும் விதமாக உள்ளது.

பிரதமர் மோடியின் ஆத்மனி பாரதத்திலிருந்து விக்சித் பாரத்திற்கு முன்னேறும் குறிக்கோளுக்கு நன்றி. இந்த குறிக்கோள் தான் நம் இந்திய விண்வெளி துறை ககன்யான் மற்றும் பாரதிய அந்த்ரிஷா ஸ்டேஷன் உருவாக வழி செய்யும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.