டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டது. அப்போது ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தது. இந்த சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை கேட்டும், இந்த சோதனை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும் சென்னை ஹைகோர்ட்டில் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், எந்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது? என்பதை அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை என அந்நிறுவன தரப்பில் வாதிக்கப்பட்டது. மேலும் காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பதிவு செய்த FIR விபரங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.