
செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீங்க என்னவோ வச்சிக்கோங்க… பாரதம்ன்னு வச்சுக்கோங்க…. நான் கூட சொல்லிட்ட.. பாரத். சுரத்து, சாரத்து எத வேணாலும் வச்சுக்க…. அதனால எனக்கு என்னன்னு சொல்லு ? நம்ம தமிழ் தாய் வாழ்த்தில் பாரத கண்டம்ன்னு வருது இத வச்சுட்டு அவங்க பேசுவாங்க. அதெல்லாம் நமக்கு ஒன்னும் இல்ல. என்ன வேணா பெயர் வச்சுக்கலாம்….
வெள்ளைக்காரன் வச்ச பெயர் சகிக்க முடியலன்னா…. வெள்ளைக்காரன் வச்ச மதத்தை மட்டும் ஏன் வச்சிருக்க…. ஹிந்துன்னு பெயர் வச்சு, சட்டம் போட்டது யாரு ? நீங்க எனக்கு பதில் சொல்லுங்களேன்… யாரு ? இந்தியான்னு பெயர் வச்சவன் அவன்…. பிடிக்கல பெயரை மாத்துற…
இந்துன்னு பெயர் வெச்சி கையெழுத்து போட்டது யாரு ? சார் வில்லியம் ஜோன்ஸ் தான… அதையும் மாத்திருங்க… அதுவும் அசிங்கமா இருக்கு… மாதிரு… வேற பெயரு வை… ஏதோ RSS ஒரு கோட்பாடு வெச்சிருக்கு. இன்னைக்கு நேத்து இல்ல…. நூறு வருஷத்துக்கு முன்னாடி முடிவு பண்ணிடுச்சி…. விடுதலைக்கு முன்னாடியே முடிவு பண்ணிடுச்சு என பேசினார்.