
சென்னையில் கலைவாணர் அரங்கம் உள்ளது. இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆர். நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சியின் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நல்ல கண்ணு குறித்த 100 கவிஞர்கள் 100 கவிதைகள் என்ற நூலை முதலமைச்சர் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியும் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், விடுதலைப் போராட்ட வீரரான நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு பாடப்புத்தகத்தில் இடம் பெற வேண்டும். காலில் செருப்பு, தீபாவளி, பொங்கல் போனஸ், 8 மணி நேர வேலை என இவை அனைத்திற்கும் நல்லகண்ணு போன்றவர்கள் தான் ரத்தம் சிந்தி பெற்று தந்துள்ளனர். இது பற்றி தெரியாத, பலனடைந்த பலர்களிலும் நானும் ஒருவன் என்றார்.