
இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து லெபனான் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீடு செசேரியா கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. அதன் அருகில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறு பிரதமர் அலுவலகத்திலிருந்து தாக்குதல் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பில் தெரிவித்ததாவது, பிரதமர் பெஞ்சமின் வீட்டிற்கு அருகில் உள்ள கட்டடத்தின் மேல் ஹிஸ்புல்லா அமைப்பின் ஆளில்லா விமானம் ஒன்று தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தாக்குதல் நடந்த நேரத்தில் பிரதமர் வீட்டில் இருந்தாரா என்பது குறித்த விவரம் குறிப்பிடப்படவில்லை. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் தலைநகரில் இரண்டு ஆளில்லாத விமானங்கள் பறந்ததாகவும் அதனை பாதுகாப்பு படையினர் அழித்துவிட்டதாகவும் தகவல் தெரிவித்தனர். ஹிஸ்புல்லா அமைப்பினர் அடுத்த கட்ட புதிய தாக்குதலுக்கு தயாராக உள்ளோம் என அறிவித்திருந்தது முக்கியமானதாகும்.