
மத்திய பிரதேசம் மாநிலம் மைஹாரில் உள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஹோலி கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது தீபு கேவத் என்பவர் தனது வீட்டில் அதிக ஒலியில் பாட்டு போட்டு உள்ளார். இந்நிலையில் அவரது பக்கத்து வீட்டுக்காரரான சங்கர் கேவத், தனது குழந்தைகள் பரிட்சைக்கு படிப்பதாக கூறி ஒலியை குறைக்க கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீபு மற்றும் அவரது 5 உறவினர்களும் சேர்ந்து, சங்கர், அவரது தந்தை முன்னா கேவத்(64) மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியுள்ளனர்.
இதில் தந்தை முன்னா கேவத் படுகாயம் அடைந்தார். இதையடுத்து தரையில் சரிந்து விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தீபு மற்றும் அவரது உறவினர்கள் தலைமறைவாகினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.