தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்தவர் நடிகை திவ்யா. இவர் தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். இவரது குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியம் கொண்டதாக கூறப்படுகிறது. இவர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இவர் தற்போது படங்கள் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்நிலையில் அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியாகி உள்ளது.

ஆனால் இதனை மறுத்து நடிகை திவ்யா தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். ஊடகங்கள் எனக்கு பலமுறை திருமணம் செய்து வைத்துவிட்டன என்றும் எத்தனை முறை என்பது கூட தனக்கு ஞாபகம் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அவ்வாறு எனக்கு திருமணம் நடந்தால் அதனை நான் அதிகாரப்பூர்வமாக மக்களுக்கு அறிவிப்பேன் என்று தெரிவித்தார். இதனால் வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என தனது கருத்தை கூறியுள்ளார்.