ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சமந்த் மாவட்டம் மஜேரா கிராமம் அருகே திருமண விருந்தினரை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து மற்றும் லாரி இடையே நடந்த கோர விபத்தில் 37 பேர் காயமடைந்தனர். இதில் 5 பேர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்வாரா பகுதியில் காரை முந்த முயன்ற லாரி திடீரென திசைமாறி எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்தை ஏற்படுத்தியது.

 

விபத்து ஏற்பட்ட இடத்தில் பார்வையாளர்களும் கிராம மக்கள் காயமடைந்தவர்களுக்கு உதவிசெய்தனர். சிலர் பேருந்தில் இருந்து பாய்ந்து உயிர் காப்பாற்றிய சோகமான காட்சிகளும் சிசிடிவி மற்றும் ஒளிப்படங்களில் பதிவாகியுள்ளது. போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் குழுக்கள் விரைந்து வந்து 37 பேரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.