சென்னை வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வருகிற 18-ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மேலும் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக இயல்பை விட 2 டிகிரி – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

அதோடு காலை வேளையில் பொதுவாக லேசான பணிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்ப நிலையாக 22 முதல் 23 செல்சியஸும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.