இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் நடன இயக்குனர் தனஷ்ரீ வர்மா ஆகியோர், மார்ச் 20, 2025 அன்று மும்பை பாண்ட்ரா குடும்ப நீதிமன்றத்தால் அதிகாரபூர்வமாக விவாகரத்து வழங்கப்பட்டனர். விவாகரத்திற்கு அடுத்த நாளே தனஷ்ரீ, தனது புதிய பாடல் வீடியோ ‘தேகா ஜி தேகா மேனே’ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். நம்பிக்கையுடன் கறுப்பு டாப் மற்றும் ஜீன்ஸில் தோன்றி, பத்திரிகைகளுக்கு புகைப்படம் போஸ் கொடுத்தார். விவாகரத்திற்கு பின் உணர்வுகளை பற்றி கேட்டபோது, அவர் கேள்வியை தவிர்க்க கையசைத்து “முதலில் பாடலை கேளுங்கள்” என பதிலளித்தார்.

மற்றொரு பத்திரிக்கையாளர், “இந்த பாடலோடு உங்கள் நிலைமை மிகவும் பொருந்துகிறது போலிருக்கிறது” எனக் கேட்டதற்கு சிரித்தபடியே ஒரு ‘தம்ப்ஸ் அப்’ செய்து பதிலளித்தார். தனஷ்ரீ நடித்துள்ள புதிய இசை ஆல்பம் ‘தேகா ஜி தேகா மேனே’ பாடலில், இஷ்வக் சிங் கணவனாக நடித்துள்ளார். இந்த பாடல், துரோகம் மற்றும் நச்சு உறவின் கதையை கூறுகிறது. இது தனஷ்ரீவின் தனிப்பட்ட வாழ்க்கையை பிரதிபலிக்கிறதா? என்ற பரபரப்பை எழுப்பியுள்ளது. இவர்களது திருமணம் 2020-ல் நடந்தது. ஆனால் ஜூன் 2022 முதல் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இறுதியாக, 2025 பிப்ரவரி 5-ஆம் தேதி, இருவரும் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து மனுவை தாக்கல் செய்தனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)