சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் டிக்கெட் பரிசோதகர் என்ற பெயரில் போலியான நபர்கள் நடமாடுவதாகவும் அவர்கள் பயணிகளிடம் அபராதம் வசூலிப்பதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் டிக்கெட் பரிசோதகர் என்ற ஒரு பணியிடமே கிடையாது. தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரத்தின் மூலமாக மட்டுமே டிக்கெட் பரிசோதனை செய்யப்படுகிறது.

அதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் போது மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைந்துள்ள கட்டண அலுவலகத்தில் அது சரி செய்யப்படுகிறது. இந்நிலையில் டிக்கெட் பரிசோதகர் என்ற பெயரில் யாரேனும் அபராதம் வசூலிப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும் இது போன்ற மோசடி வேலைகளில் ஈடுபடுபவர்களிடம் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.