துருக்கியில் உள்ள இஸ்தான்புல் விமான நிலையத்தில் வர்த்தக அமைச்சகத்தின் சுங்க அமலாக்க குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் நம் நாட்டுக்குள் கொரில்லா குட்டி ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் கைப்பற்றினர். இதுகுறித்து அந்நாட்டின் வேளாண்மை மற்றும் வனத்துறை அமைச்சகம் எக்ஸ் வலப்பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது, இந்த கொரில்லா எங்கள் ஊழியர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனுடைய உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால் இது தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்படும் என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். தற்போது இந்த கொரில்லா குட்டியை தேசிய பூங்கா ஊழியர்கள் பராமரிக்கின்றனர். இருப்பினும் இந்த கொரில்லா நிரந்தரமாக எங்கு வைத்து பராமரிக்கப்படும் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறினார்.