
பரேலியில், ஒரு சிறுமி வீட்டின் பின்புறம் கைவிடப்பட்ட நிலையில் கிடந்ததை பார்த்த நடிகை திஷா பதானியின் சகோதரியும், முன்னாள் இந்திய ராணுவ அதிகாரியுமான குஷ்பூ பதானி உடனடியாக காப்பாற்றி பராமரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை வெளியான அந்த வீடியோவில், சிறுமியை தூக்கிக்கொண்டு செல்லும் குஷ்பூ, அக்கறையுடன் அவரது நலனைக் கவனித்து, தகவலின்படி போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து, சம்பவத்தைக் குறித்த போலீசார் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
View this post on Instagram
இந்த வீடியோவுடன் வெளியிட்ட தன்னுடைய பதிவில், குஷ்பூ, பரேலி போலீசாரை, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் மற்றும் முதலமைச்சர் நரேந்திர மோடியை டேக் செய்து, பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் எப்போது வரை தொடரும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “இந்த குழந்தை பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் வரை நான் உறுதி செய்வேன். அவளுடைய வாழ்க்கை இனிமையானதாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார். #SaveChild #BetiBachao #UPPolice #ChildProtection என்ற ஹேஷ்டேக்குகளும் பதிவில் இடம்பெற்றுள்ளன.
திஷா பதானியும், குஷ்பூ பதானியும் பரேலி பகுதியில் வளர்ந்தவர்கள். குஷ்பூ இந்திய ராணுவத்தில் பணியாற்றிய பின்னர் சமூக சேவைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். திஷா பதானி திரைப்படங்களிலும், விளம்பரத்துறையிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
தற்போது திஷா, ‘Welcome to the Jungle’ என்ற திரைப்படத்தில் அக்ஷய் குமார், சஞ்சய் தத், சுனீல் ஷெட்டி, ரவீனா டாண்டன் உள்ளிட்ட பிரபலங்களுடன் இணைந்து நடித்து வருகிறார். படம் 2025 இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.