டெல்லி ரோகினி பகுதியில் ஜப்பான் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் நடைபெற்ற பாஜக பரிவர்தன் பேரணியில் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, டெல்லி சிறந்த தலைநகரம் என்ற அந்தஸ்தை பாஜகவால் மட்டுமே வழங்க முடியும், மக்களின் இதயங்களை வெல்வதற்கும், டெல்லியில் இருந்து இந்த ஆம் ஆத்மி கட்சியை அகற்றுவதற்கும் இதுவே சிறந்த நேரம். வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளுவதில் மக்கள் பாஜகவை நம்பர் தொடங்கிவிட்டனர். இந்த ஆம் ஆத்மி அரசுக்கு டெல்லி மக்களின் வளர்ச்சிக்கான தொலைநோருக்குப் பார்வை இல்லை இன்றும், அனைத்து வளர்ச்சி பணிகளும் டெல்லி அரசால் மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறினார்.

டெல்லியில் அணைத்து இடத்திலும் உள்ள நமோ பாரத் ரயில் சேவை, நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் போன்ற அனைத்து வேலைகளையும் மத்திய அரசுதான் செய்கின்றது. ஆம் ஆத்மி கட்சி தங்களது தோல்வியை கண்டு பீதி அடைந்துள்ளனர். அவர்கள் பொய்களை பரப்பி வருகிறார்கள் என்று கூறினார். இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2020ம் ஆண்டு டெல்லி தேர்தல் அறிக்கையில், பாஜக அளித்த வாக்குறுதிகளை குறிப்பிட்டு டெல்லிக்கு எதுவும் செய்யாத நிலையில், தற்போது மக்களிடம் பாஜக வாக்கு கேட்க எவ்வளவு தைரியம் என்று கேள்வி எழுப்பினார்.

டெல்லியில் நில சீர்திருத்த சட்டத்தின் 81 மற்றும் 33 பிரிவின் கீழ் நீக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்து இருந்தார். ஆனால் இது மத்திய அரசால் மட்டுமே முடியும். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி மத்திய அரசுக்கு பரிந்துரைகளை அனுப்பியது, ஆனால் அவை புறக்கணிக்கப்பட்டது என்று கூறினார். பலமுறை உத்தரவாதம் அளித்தும் விவசாயிகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கு உரிமையை வழங்க பாஜக தவறிவிட்டது என்று கூறினார். பிரதமர் மோடி அடுத்ததாக டெல்லியில் வாக்கு கேட்கும் போது, இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். டெல்லி கிராமப்புற மக்கள் காத்திருக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.