இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இருந்து வாடிக்கையாளர் ஒருவர் சாலட் பார்சலை வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற அவர் அந்த பார்சலை அவிழ்த்து, சாப்பிட முயன்றார். அப்போது அதற்குள் உயிருடன் இருந்த தவளை ஒன்று வெளியே வந்துள்ளது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அந்தப் பார்சலை பல்பொருள் அங்காடியில் திருப்பிக் கொடுத்தார்.

அதன் பின் பூர்வீக உயிரின காப்பகத்தினரை தொடர்பு கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீட்பாளர்கள், தவளையை பாதுகாப்பாக மீட்டு தனிமைப்படுத்தினர். இது போன்ற சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது என்று அந்த அமைப்பின் மீட்பாளர் தெரிவித்தார். மேலும் பல்பொருள் அங்காடியில் உள்ள சாலட் பார்சலில் எப்படி தவளை வந்தது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.