
வருமானச் சான்றிதழ் என்பது தனி நபர் அல்லது ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானத்தை உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான ஆவணமாகும். இதனை ஆன்லைன் மூலமாக எவ்வாறு விண்ணப்பிப்பது என்று காணலாம்.
- முதலில் என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். பின்பு அதில் இ -சேவை ஐடி-யை ரிஜிஸ்டர் செய்த பிறகு சைனப் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து தங்களுடைய பெயர், முகவரி, மாவட்டம், தாலுகா, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி , ஆதார் எண், லாகின் ஐடி, பாஸ்வேர்ட் , கன்ஃபார்ம் பாஸ்வேர்ட் மற்றும் கேப்சா கோட் ஆகியவற்றை டைப் செய்து கொள்ள வேண்டும்.
- பிறகு சைனாப் என்பதை கிளிக் செய்து தங்களுடைய மொபைல் போனுக்கு வரும் ஓடிபி என்னை டைப் செய்து என்டர் என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய விவரங்கள் ரிஜிஸ்டர் ஆகிவிடும்.
- இதனையடுத்து லாகின் செய்ய ஹோம் பேஜுக்கு சென்று அதில் யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகியவற்றை டைப் செய்து அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள கேப்சா கோடை டைப் செய்து லாகின் என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது உங்கள் ஐடி லாகின் ஆகிவிடும். அதனைத் தொடர்ந்து லாகின் உள்ளே சென்றவுடன் சர்வீஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் ரெணியூ டிபார்ட்மெண்டில் கொடுக்கப்பட்டுள்ள லிஸ்ட் அவுட் இல் நீங்கள் எதற்கு விண்ணப்பம் செய்யப் போறீர்களோ அதனை செலக்ட் செய்து ப்ராசஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- அதனைத் தொடர்ந்து கேன் நம்பரை பதிவு செய்து அதில் உங்கள் விவரம் தந்தை பெயர், தாயார் பெயர் குடும்ப உறுப்பினர் விவரம் ஆகிய அனைத்தையும் பதிவு செய்து நீங்கள் செலக்ட் செய்த கோரிக்கைக்கு தேவையான டாக்குமெண்ட்ஸ்களை அப்லோட் செய்ய வேண்டும்.
- கடைசியாக மேக் பேமென்ட் ஆப்ஷனில் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றை பயன்படுத்தி விண்ணப்ப கட்டணமான ரூபாய் 60 செலுத்தவும், இப்போது நீங்கள் அப்ளை செய்த சான்றிதழை சில நாட்களுக்குப் பின் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.