
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள சாலையில் இன்று காலை ரயில் தண்டவாளங்கள் அமைப்பதற்கு பயன்படுத்தக்கூடிய கம்பிகளை லாரி ஒன்று ஏற்றி சென்றது. இந்நிலையில் பெட்ரோல் பம்ப் அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது 2 ஆட்டோக்களை முந்தி செல்ல முயன்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்த 2 கம்பிகள் ஆட்டோ மீது விழுந்தது.
இதில் 4 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். லாரி ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததால் இந்த சம்பவம் அரங்கேறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் லாரி டிரைவரை கைது செய்தனர்.