உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் அடுக்கு மாடி குடியிருப்பில் 10வது மாடியில் ராகுல் சவுத்ரி வசித்து வருகிறார். இவர் இணையதளம் வாயிலாக கஞ்சா செடி வளர்ப்பது குறித்து கற்றுக்கொண்டு வீட்டின் மாடியில் கஞ்சா தோட்டத்தை அமைத்துள்ளார். இந்தத் தோட்டத்தில் 80 செடிகளை சூரிய ஒளி இல்லாமல் செயற்கை ஒளி மூலம் யூடூப்பில் பார்த்து வளர்த்து வந்துள்ளார்.

ஒவ்வொரு செடிக்கும் 5000 முதல் 7000 ரூபாய் வரை செலவு செய்துள்ளார். மேலும் டார்க் வெப் என்ற இணையதளம் மூலம் கஞ்சாவை விற்பனை செய்து பல லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார். இதில் 30 கிராம் கஞ்சா 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது. இதுகுறித்து ரகசிய தகவல் அறிந்த காவல்துறையினர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ராகுல் சவுதிரியை கைது செய்தனர்.

இதனை அடுத்து அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் வீட்டில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளை காவல்துறையினர் அழித்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டது குறித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.