ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்துள்ள பகுதியில் இருசக்கர வாகன ஷோரூம் ஒன்று உள்ளது. இந்த ஷோரூமிற்கு நேற்று சூர்யா என்பவர் சென்று அங்கு புதிய பைக் ஒன்றை வாங்கி உள்ளார். இந்நிலையில் பைக்கை வாங்கி சுமார் ஒரு மணி நேரத்தில், அவர் சாலையில் வைத்து பைக்கை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த பைக்கில் இருந்து தீ பொறி கிளம்பியது.

அதன் பின் சிறிது நேரத்தில் பைக் முழுவதும் தீ பற்றி எரியத் தொடங்கியது. இதைப்பார்த்து சுதாரித்துக் கொண்ட சூர்யா பைக்கை விட்டு விலகிச் சென்றார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், புதிதாக வாங்கிய பைக் தீப்பற்றி எரிந்தது என்பதை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.