
மும்பையில் கல்யாண் அஜ்மீரா ஹைட்ஸ் பகுதியில் மராத்தி பேசும் மக்களும், மராத்தி பேசாத மக்களும் ஒரே குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அந்த குடியிருப்பில் அரசு பணியாளரான அகிலேஷ் சுக்லா என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் குடியிருப்புக்கு வெளியே அகர்பத்தி ஒன்றை கொளுத்தி வைத்துள்ளார். அதன் புகை மற்ற இடங்களுக்கு பரவியதால் பலருக்கும் இடையூறாக இருந்துள்ளது. இதனால் விஜய் கல்விகாதே, அபிஜீத் தேஷ்முக் மற்றும் ஒருவர் சென்று அவரிடம் அகர்பத்தியை நிறுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் சுக்லா 10 பேரை அழைத்து வந்து ஆயுதங்களுடன் அவர்களை தாக்கினர்.
இதில் தேஷ்முக்கிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. தீரஜ் மற்றும் கல்விகாதேவுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சுக்லா அரசு பதவியில் இருப்பதால், அதை தவறாக பயன்படுத்தி மிரட்டலில் ஈடுபடுகிறார் என்று அங்கு உள்ளவர்கள் கூறுனர். இதனால் அவருக்கு எதிராக யாரும் பேசவே மாட்டார்கள். அவர் மீது வழக்குப்பதிவு ஆகியுள்ளது என்று மராட்டிய முதல் மந்திரி பாட்னாவிஸ் கூறியுள்ளார். அவரை சஸ்பெண்ட் செய்வதற்கான வேலையும் நடைபெற்று வருவதாக கூறினார். இதையடுத்து காவல்துறையினர் சுக்லா உட்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.