
கொல்கத்தா நகரின் காஸ்பா பகுதியில் நடந்த சோகமான சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காஸ்பா பகுதியில் சோம்நாத் ராய் என்பவர் தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் மூவரும் தங்களுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர் என்று கூறப்படுகிறது. அதாவது சோம்நாத் ராய் மற்றும் அவரது மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் அவர்களது குழந்தையின் உடல் கழுத்தில் கட்டப்பட்டு, கயிற்றியில் தொங்கியபடி கிடந்தது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கடன் தொல்லை காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அவர்களுடைய வீட்டில் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது. அதில் குடும்ப உறவினர்கள் சிலர் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அவர்களை தொடர்ந்து தொந்தரவு செய்வதாக எழுதியிருந்தது. அதோடு கடன் தொல்லையும் இன்னொரு காரணமாக எழுதப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து லோன் ஏஜென்டான சோம்ஷுப்ரா மொண்டல் மற்றும் முகோபாத்யாய் ஆகியோரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் இருவரும் சோம்நாத் ராய்க்கு பல்வேறு நிதி நிறுவனங்கள், வங்கி மற்றும் பினான்ஸ் நிறுவனங்களின் மூலம் 1.62 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான கடன்களை எடுக்க உதவி இருப்பது தெரிய வந்தது.
மேலும் இவர்களின் நடவடிக்கைகள் இந்த குடும்பத்தின் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் கூறுகின்றனர். அதோடு அவர்கள் குடும்பத்தினரை கடனை திருப்பித் தர கட்டாயப்படுத்தியதோடு, குழந்தையை கடத்துவதாகவும் மிரட்டியதாக தற்போது தகவல்கள் வெளியான நிலையில் இந்த குடும்பத்தின் தற்கொலை சம்பவம் கடன் மோசடிகளின் காரணமாகவே ஏற்பட்டிருக்க கூடும் என்பதில் போலீசார் உறுதியாக உள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.