திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ப்பாக்கம் என்னும் கிராமம் உள்ளது. இங்கு ராஜாராம்(58) -சாமுண்டீஸ்வரி(49) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தினசரி கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய இவர்கள் நேற்றிரவு தங்களுடைய வீட்டில் சாப்பிட்டுவிட்டு தூங்கினர். இதைத்தொடர்ந்து காலையில் இருவரும் வெளியே வராததை அறிந்த அக்கம்பக்கத்தினர் வீட்டினுள் சென்று பார்த்தனர்.

அப்போது உள்ளே இருந்த அறையில் கணவன், மனைவி இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அருகில் இருந்த கிராமிய காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.