
தற்போதைய காலகட்டத்தில் கணவன்-மனைவி பிரச்சனை அதிகமாகவே அரங்கேறி வருகின்றது. அவ்வாறு இருக்கையில் நாம் குழந்தைகளிடம் அந்த கோபத்தை காட்டக்கூடாது. அவ்வாறு செய்தால் அவர்கள் மனதளவிலும் உடலளவிலும் பெரும் துன்பத்திற்கு ஆளாகுவர். மேலும் கணவன்-மனைவி பிரச்சனை என்றால் அதனை தங்களுக்குள்ளேயே முடித்து விட வேண்டும். இதில் குழந்தைகளை இழுக்க கூடாது, அவர்களை துன்புறுத்தவும் கூடாது அது மிகவும் தவறான ஒன்றாகும். இந்நிலையில் சீனாவில் கணவன் -மனைவி தகராறு வந்துள்ளது.
அதில் தாய் ஒருவர் தனது குழந்தைகளிடம் கொடூரமாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட சண்டையின் போது அவரை கோபமடைய செய்ய மகன் மற்றும் மகளை அடுக்குமாடி குடியிருப்பின் 23 வது மாடிக்கு வெளியே உள்ள ஏசி யூனிட்டில் உட்கார வைத்துள்ளார். இதனை காப்பாற்ற சென்ற கணவனையும் அவர் தடுத்து நிறுத்தி உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் குழந்தைகளை மீட்டு காப்பாற்றியதோடு அந்த பெண்ணிற்கு இதுபோன்று குழந்தைகளை துன்புறுத்த கூடாது என்று அறிவுரையும் கூறிவிட்டு சென்றுள்ளனர்.