உத்திரபிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்திலுள்ள இஸ்மாயில்பூர் கிராமத்தில் ஷைலேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சவிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கர்வா சாத் பண்டிகைக்காக அவரது மனைவி சமைத்த உணவை சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். பின்னர் உணவில் விஷம் வைத்து தனது மகனை கொன்று விட்டதாக ஷைலேஷின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் சவிதா மீது புகார் கொடுத்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சவிதாவை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருமணம் ஆன இந்து பெண்கள் தங்களின் கணவரின் நீண்ட ஆயுள் மற்றும் நலனுக்காக விரதம் இருந்து பூஜை செய்வதை கர்வா சாத் தினம் ஆகும். திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவனை வேண்டி விரதம் மேற்கொள்வார்கள் இந்த நாளில் பெண்கள் சூரிய உதயம் முதல் சந்திரன் உதயம் வரை கடுமையாக விரதத்தை கடை பிடிப்பது வழக்கம். இந்த விரத தினத்தன்று ஷைலேஷிற்கு இவ்வாறு நடந்தது அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.