18ஆவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரானது வருகிற 22ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதற்கு அனைத்து அணியினரும் தங்களை தீவிரமாக பயிற்சியில் ஈடுபடுத்தி வருகிறார்கள்.  இந்த தொடருக்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள். இதனையடுத்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் மும்பை எனக்கு எதிரான போட்டியில் சென்னை அணி விளையாடுகிறது.

இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்க இருக்கிறது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் – சாம் கரன் சென்னை அணியில் இணைந்திருக்கிறா.ர் இதனை வரவேற்கும் விதமாக சென்னை அணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விஜயின் மாஸ்டர் மற்றும் அஜித்தின் குட் பேட் அக்லி பட ட்ரெய்லர் ஸ்டைலில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள்.