
கர்நாடகா மாநிலத்தில் உள்ள நில ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு தற்போது பதிலடி கொடுக்கும் விதமாக, சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், “இந்தப் புகாருக்கு பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய அமைச்சர் குமாரசாமி ஆகியோர் முதலில் பதவி விலக வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறித்ததாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நிலையில் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோன்று மத்திய மந்திரி ஜே.பி நட்டா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரங்களினால்வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி மற்றும் குமாரசாமி ஆகியோர் பதவி விலக வேண்டும் என சித்த ராமையா பதிவிட்டுள்ளார். மேலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலகினால் நானும் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் என்று சித்தராமையா கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.