
செய்தியாளர்களிடம் பேசிய அமர் பிரசாத் ரெட்டி, பிரஸ், பர்ஸ்ட் டைம் அரெஸ்ட் ஆகுறாங்க அப்படின்னா… அவர்களை வைப்பதற்கு, நியூ பிளாக் அப்படின்னு சொல்றாங்க…. அந்த நியூ பிளாக் என்பது பர்ஸ்ட் டைம் கைதின்னு வராங்க இல்லையா? ஃபர்ஸ்ட் டைம் ரிமாண்ட்டில் வருகின்றவர்களை அங்கே வைப்பாங்க…. அங்க கொஞ்சம் பேசிக் ஃபெசிலிட்டிஸ் இருக்கும்… ஆனால் என்னை பாத்தீங்கன்னா….
டார்ச்சர் பண்றாங்க….. பிளாக் 3 செல் 2. இந்த பிளாக் 3 செல் 2 எல்லாமே கொலை பண்ணி உள்ளே வந்தவர்கள்… போதை வழக்கில் வந்தவர்கள், 80 சதவீதம் மிசா கைதிகள், கஞ்சா இந்த மாதிரி இதுல மாட்டுனவங்க இடத்துல என்னை போட்டு….. என்னால இவங்க யாரையும் பார்க்க முடியாது. என்கூட வந்து அஞ்சு கட்சி தொண்டர்களையும் என்னால பாக்க முடியாது.
நான் எப்பவாவது கோர்ட்டுக்கு போனா தான், என் மனைவியோ, யாரையோ அந்த இடத்துல பார்க்க முடியுமே தவிர, மத்த யாரையும் உள்ள பார்க்க முடியாது. மனு போட்டா கூட பார்க்க முடியாத அளவுக்கு…. நாலு மணி நேரம் வெயிட் பண்ணனும்…. 4 மணி நேரம் 5 மணி நேரம் 6 மணி நேரம் வெயிட் பண்ணனும்… 6 மணி நேரம் வெயிட் பண்ண வச்சு, அவங்கள பார்க்க விடாம…. நீங்க அந்த அளவுக்கு போனீங்கன்னா…. சட்டத்தை எந்த அளவுக்கு மிஸ் யூஸ் பண்றாங்க… அட்வகேட் மனுவில் கூட பார்க்க விட மாட்டாங்க.
அட்வகேட்ஸை இவர் ஆல்ரெடி பார்த்துட்டாருங்க… நீங்க வராதீங்க…. நம்ப அட்வகேட்லாம் ரொம்ப ஸ்மார்ட்டா ஃபைட் பண்ணி…. நான் கோர்ட்டிலேயே சொன்னேன்… அட்வகேட் கூட பார்க்க விடமாட்டேங்குறாங்க அப்படின்னு….. இவ்வளவும் பண்ணி கேஸ் எல்லாம் என்னன்னு பாத்தீங்கன்னா……
நான் ஒன்னும் ஊழல் செஞ்சு போகல ஜெயிலுக்கு….. நான் ஒன்னும் மக்கள் காசை கொள்ள அடிச்சு போகல ஜெயிலுக்கு…. நா ஒன்னும் மக்கள் திட்டங்களை திருட்டுத்தனமாக காசு எடுத்து நான் போகல…. நான் போனது என்னுடைய கட்சிக்காக… என் கொடிக்காக…. எங்களுடைய கொள்கைக்காக… எனக்கு பெருமையா இருக்கு…. எனக்கு உண்மையிலேயே பெருமையா இருக்கு தெரிவித்தார்.