
நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான கங்கனா ரனாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப் படை அதிகாரி தாக்கியதாக காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது கங்கனா ரனாவத் இதுகுறித்து விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “ஊடகங்கள் மற்றும் நலம் விரும்பிகள் என்னை தொலைபேசியில் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்து வருகிறார்கள்.
முதலில், நான் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் என்னுடைய கவலை என்னவென்றால் பஞ்சாபில் அதிகரித்து வரும் தீவிரவாதம், அதை எப்படி கையாள்வது? என்பது தான்” என தெரிவித்துள்ளார்.