
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், ராணுவ பலத்தோடு… வேங்கை புலி ஓட பாய்ச்சலில், பாயும். எளியவர்களுக்கான அரசியல், அதிரடி அரசியல், தடாளடி பதவிகள். எல்லாருக்கும் பதவி வேண்டும். ஒருத்தவங்களே ரசிச்சிட்டு இருக்கின்றதை அனுமதிக்க முடியாது.. நாங்க இரவு பகலா பல மாதங்களை ரெடி பண்ணிட்டு இருக்கோம். இப்போ அதற்கான தளம் வந்துருச்சு. முதலில் எல்லாரையும் அதிகாரத்தில் அமர வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் தொகை சென்சஸ் அன்னைக்கு சொன்னேன்…. அது இந்தியா முழுவதும் உடனடியாக நடத்தப்படணும்…
என்னடா பத்தோடு பதினொன்னு…. அத்தோட இது ஒன்னு… நீயும் ஒரு கட்சி ஆரம்பிக்கிறியான்னு கேக்குறீங்க…. உங்க கேள்வியை வரவேற்கிறேன் நான்… ஐயா சீமான் ஐயா 2009 இல் ஆரம்பிச்சாங்க. நான் அதுக்கு முன்னாடியே 1992லே அரசியலுக்கு வந்துட்டேன்… எத்தனை வருஷம் ஆச்சுன்னு கணக்கு போட்டுக்கோங்க ? 1992இலே பாட்டாளி மக்கள் கட்சியில் கிடந்தது மூன்று, நான்கு வருடங்களாக பயணித்தேன்.
நானாக வெளியே வந்துட்டேன்… அப்பவே நான் அரசியலில் இறங்கிட்டேன். அதுக்கப்புறம் 1999இல் புதிய தமிழகம் சார்பாக இதே பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு இருக்கேன். ஒரு லட்சம் வாக்குகள் கிட்ட வாங்கி இருக்கேன். அதுக்கப்புறம் 2009 திருச்சியில் தனியாக நான் நின்னேன். தோத்துட்டேன்…
அதற்குப் பிறகு 1999, 2009, 2019 எத்தனை ஆண்டுகள் பாருங்க…. 2019இல் நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்டேன். 85 ஆயிரம் சொச்சம் ஓட்டுகள் வாங்குனேன்… எல்லாருக்கும் தெரிஞ்சது தான்…. நான் போராடி உழைத்து, ரொம்ப கஷ்டப்பட்டு…. நான் பண்ண பல விஷயங்கள், டீ குடிக்கிறது… பரோட்டா போடுவது…. மீன் பிடிக்கிறது…. மீன்காரனுக்கு உதவுவது…. இளநீர் வெட்டுவதில் இருந்து யார் யாரோ இன்னைக்கு எல்லாம் பண்ணிட்டு இருக்காங்க அதை பத்தி கவலை இல்லை… அனுபவத்துக்காக உங்களுக்கு சொன்னேன் என தெரிவித்தார்.