
மதுரை சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை பெற்ற சவுக்கு சங்கர், தமிழக அரசின் நடவடிக்கைகள் மீது கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது பேச்சில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது விமர்சனங்களை முன்வைத்து, திமுக அரசை எதிர்க்கும் எந்தவொரு கருத்தையும் கூற முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், உண்மைகளை பேசுவதற்காகவே தன்னை இரண்டு முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததாகவும், காவல்துறையினர் கடுமையாக மிரட்டியதாகவும் அவர் கூறினார்.
சவுக்கு மீடியா 8 மாதங்களாக வெளிக்கொண்டு வந்த உண்மைகளை தமிழ்நாடு அரசு தடுக்க முயன்றதாகவும், அதன் காரணமாகவே தனது வங்கி கணக்குகள், அலுவலகம், மற்றும் வீடுகளும் சீலிடப்பட்டதாக சங்கர் தெரிவித்தார். அவர் தனது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், தன்னை சவுக்கா வைத்து உச்சகட்டமாக துன்புறுத்தியதாகவும் கூறினார். உண்மையை வெளிப்படுத்த தொடர்ந்து தைரியமாக செயல்படுவேன் என சங்கர் உறுதியாக தெரிவித்தார்.
தமிழகத்தில் பத்திரிக்கை சுதந்திரம் முற்றிலும் இல்லாமல் போய்விட்டதாக சங்கர் குற்றம்சாட்டி, மாநிலத்தை “திராவிட மாடல்” என்ற சாவக்கேடு பிடித்துள்ளதாக தனது ஆவேசமான பேச்சில் தெரிவித்தார்.