
கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் சித்தலிங்கையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளம் பெண் ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பெண் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த சித்தலிங்கையா தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடந்த 11ம் தேதி அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடியாமல் தவித்தனர். ஏனென்றால் அவர்களிடம் பணம் இல்லை. இதனால் அவர்கள் வாடகை காரில் லிப்ட் கேட்டு அந்த வாகனத்தின் டிக்கியில் உடலை வைத்து எடுத்துச் சென்றனர்.