
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்துள்ள பகுதியில் கணேசன் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கறிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணே கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்தப் பெண் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார். இது பற்றி அறிந்த கணேசன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து, இன்று திருமணமும் நடக்க உள்ளது. இந்நிலையில் கணேசன் தனது அக்காவை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் பைக்கில் சென்றுள்ளார். அப்போது டாஸ்மாக் கடையில் நின்று மது வாங்கிவிட்டு, அங்குள்ள சுடுகாட்டில் அமர்ந்து மது உடன் பூச்சி மருந்தை கலந்து குடித்துள்ளார்.
இதனை தனது செல்போனில் வீடியோ எடுத்தத்தோடு, உயிர்க்கு உயிராக காதலித்த என்னுடைய காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதால் என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. நீ இல்லாத உலகத்தில் என்னால் வாழ முடியாது, எங்கிருந்தாலும் நீ நலமுடன் வாழ வேண்டும் என்று பேசியுள்ளார். இதனை தனது அண்ணன், அக்கா, உறவினர்களுக்கு வாட்ஸ்-ஆப்பில் அனுப்பி விட்டு சிறிது நேரத்தில் உயிர் இழந்துள்ளார். இதனை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து, காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின் படி விரைந்து வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில் மேல் கண்ட விபரங்கள் தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.