
பெங்களூருவில் சதீஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கடந்த 2023 ஆம் ஆண்டு சதீஷ் தனது மகளை அருகில் உள்ள ஒரு பள்ளியில் சேர்ப்பதற்காக பள்ளிக்கு சென்ற நிலையில் அங்கு ஆசிரியை ஸ்ரீதேவியுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் அந்த ஆசிரியருடன் சதீஷ் உல்லாசமாக இருந்திருக்கிறார். அதோடு அவரிடம் பேசுவதற்காக தனியாக சிம் கார்டு வாங்கி வைத்து வீடியோ காலில் பேசியதோடு செய்தி பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் ஆசிரியை ஸ்ரீதேவி தன்னுடன் இருந்த ஆபாச புகைப்படங்களை வைத்து சதீஷிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பயந்து போன சதீஷூம் கிட்டத்தட்ட ரூ. 4 லட்சம் வரை கொடுத்துள்ளார். அதன் பிறகு தனது வியாபாரம் நஷ்டம் அடைந்த காரணத்தினால் குடும்பத்துடன் குஜராத்துக்கு குடியேற திட்டமிட்டார். அதற்காக கடந்த மார்ச் மாதம் மகளின் transfer certificate வாங்குவதற்காக பள்ளிக்கு சென்றார். அங்கு ஸ்ரீதேவியின் அலுவலகத்தில் இருந்த சாகர் கணேஷ் என்ற 2 பேர் அவரிடம் ஸ்ரீதேவியுடன் இருந்த ஆபாச புகைப்படங்களை காட்டி ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.
இதனால் செய்வதறியாமல் திணறிய சதீஷ் ரூ. 15 லட்சம் தருவதாக சமாளித்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார். அதன்படி ரூபாய் ரூ. 1.9 லட்சம் வரை அவர்களிடம் கொடுத்துள்ளார். இருந்தபோதிலும் மிரட்டல்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. அந்த சமயத்தில் ஸ்ரீதேவி சாகர் கணேஷ் ஆகிய மூவரும் இணைந்து பணத்தை பகிர்ந்து கொள்வதற்காக திட்டமிட்டுள்ளனர். அதன்படி முன்னாள் போலீசார் ஒருவருக்கு 5 லட்சமும்,சாகர் கணேஷ் ஆகியிருக்கும் தலா ஒரு லட்சமும் தனக்கே 8 லட்சமும் தேவை என்று ஸ்ரீதேவி கூறியுள்ளார்.
இவர்களின் மிரட்டலால் பாதிக்கப்பட்ட சதீஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஸ்ரீதேவி உள்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.