
சமூக வலைதளங்களில் சமீப காலங்களாக பலரும் தங்களது வாழ்க்கை நடைமுறைகளை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு வருகின்றனர். இதேபோன்று சமூக வலைதளத்தில் அதிக கவனம் பெற்றுள்ள பை என்ற பெண்மணி தனது வாழ்க்கை முறையை இணையத்தில் வெளியிட்டதை அடுத்து பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.
அதாவது இவர் தனக்கு 11 குழந்தைகள் உள்ளதாகவும், 8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகள் பெற்றெடுத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் பை தனக்கு 30 குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என்பதே வாழ்க்கையின் இலக்கு எனவும் தெரிவித்துள்ளார். தனது குழந்தைகள் மற்றும் வாழ்க்கை முறையை திறந்த வெளியில் பகிர்ந்து வரும் பை கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.
இதுகுறித்து பை கூறியதாவது, எனக்கு ஒவ்வொரு குழந்தையும் விலைமதிப்பற்ற பொக்கிஷம் எனவும், மகிழ்ச்சியான குடும்பம் ஒன்றை உருவாக்க விரும்புவதாகவும், அதற்காக 30 குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆனால் அவரது வாழ்க்கை முறை எண்ணம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சிலர் இதைப் பொறுப்பற்ற செயல் என விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் பல்வேறு விமர்சனங்களை பெற்று வந்தாலும் பைக்கு டிக்டாக்கில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலோவர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.