
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசியல் பின்னணி இல்லாம இத பேசுவாங்களாங்க.. 13 ஆண்டுகளா இதே பிரச்சனையை… தேர்தல் வரும்போது… தேர்தல் வரும் போது….பேசிட்டே இருந்தா ? அதை எப்படி எடுத்துக்கிடுவீங்க ? நான் ஒரு குடும்பத்தில் பிறந்திருக்கேன். ஒரு நல்ல குடும்பத்தில் பொண்ணு எடுத்து இருக்கேன். ஒரு பெரிய தலைவனால் உருவாக்கப்பட்டிருக்கேன்.
எனக்கு கோடி கனவுகள் அவன் தந்திருக்கான். கோடிகளை தரல , கொள்கைகளை தந்திருக்கான். லட்சங்களை தரல, உயர்ந்த லட்சியங்களை தந்து… என்னை அனுப்பி வைத்தவன். அந்த உறுதியோட சிறிதும் சமரசம் இல்லாமல்… ஒரு எளிய மகன், சண்டை போடுறேன்.இந்த 13 – 14 வருஷங்களில் நான் இழந்தது சொல்லி மாளாது. என்னோட வாழ்ந்து வர்றவங்களுக்கு தெரியும்.
அவ்வளவு அவமானங்கள், ஏச்சுப் பேச்சுக்கள், எல்லாத்தையும் விட்டுட்டு நான் போராடிக் கொண்டு போகும் போது… நீங்க சும்மா எளிதா வந்து, அப்படி பண்றது… இப்படி பண்றது… இதெல்லாம் வெட்டித்தனமான வேலை. அந்த மரியாதைக்காக… சமூக மரியாதைக்கு… மனித மாண்புக்கு… ஒரு கண்ணியத்திற்கு… நாம அமைதியா இருக்கோம்.
நான் அமைதியா இருகிறதாலயே… என்னுடைய மௌனத்தினாலேயே அவங்க சொல்ற… அந்த பொம்பள சொல்ற எல்லாமே உண்மைன்னு நீங்க நம்பிட்டு இருந்தீங்கன்னா…. ஒரு நாள் நான் என்ன தெரியும் இல்ல… கெட்ட ராஸ்கல்…. வெடிச்சு சிதறிட்டேன்ன்னு வச்சுக்கோங்க… ஒருத்தனும் இருக்க முடியாது. தல காட்ட முடியாது. எல்லாத்தையும் சரி போகட்டும்… விடு, போய் தொலையட்டும் என தெரிவித்தார்.