
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதாவது அப்பகுதியில் வசிக்கும் தீபிகா துர்வே(11) என்ற சிறுமி அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த சிறுமி செல்போனை பயன்படுத்தியுள்ளார்.
இதனை பார்த்த தாய் அவரை கண்டித்து அவரிடம் இருந்த செல்போனை வாங்கி உள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவரது தாய் வெளியே இருந்துள்ளார். சிறுமியின் அக்கா வீட்டிற்குள் குளிக்க சென்றுள்ளார். அப்போது உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
உடனடியாக சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த அந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.