டெல்லியில் உள்ளூர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு நபர், தெருவில் தனது காரை ஓட்டிச் சென்ற போது, ஒரு வயதான நாயை மோதியதாகக் கூறப்படுகிறது. அந்த நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதைவிடக் கொடூரமானது, அந்த நபர் தன் செயலுக்காக எந்த வருத்தமும் காட்டாமல், அங்கிருந்த பெண்ணொருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் அவர் “நான் ஹார்ன் அடிச்சேன், மெல்ல ஓட்டினேன், நான் என்ன பண்ண முடியும்?” என அவமானமாகவும், பொறுப்பற்றவையாகவும் பதிலளித்த அவர், பிறகு அங்கிருந்து விடை பெற்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பலரும் இந்த மனிதரின் நடவடிக்கையை கடுமையாக கண்டிக்கின்றனர்.