சத்தியமங்கலத்தை அடுத்த கேர்மாளத்தில் மங்கலம்மாள்(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் செல்வதற்காக பேருந்தில் ஏறி உள்ளார். அதன் பின் பேருந்தில் இடம் பிடிப்பதற்காக தான் கொண்டு வந்த மஞ்சள் பையை வைத்துவிட்டு தேநீர் அருந்துவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். இதையடுத்து மீண்டும் வந்து பார்த்தபோது, பேருந்து புறப்பட்டு சென்று விட்டதை  பார்த்த அதிர்ச்சயடைந்தார்.

ஏனென்றால் அந்த பையில் ஒரு லட்ச ரூபாய் இருந்துள்ளது. இதுகுறித்து அந்த மூதாட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் எதிர்நோக்கி காத்திருந்து, பாட்டியின் மஞ்சப்பை மீட்டு உள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், மூதாட்டி தவறவிட்ட பையில் இருந்த, பணமும், வெள்ளி பொருள்களும் அப்படியே இருந்தன. பணம் கிடைத்த மகிழ்ச்சியில் மூதாட்டி காவல் துறையினருக்கு நன்றி கூறினார்.