
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் உதய் என்ற 35 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஹேமா (32) என்ற பெண்ணை காதலித்து கடந்து சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 4 வயதில் சிந்து ஸ்ரீ என்ற மகளும், 3 வயதில் ஸ்ரீ ஜெய் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஹேமா மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இதனால் உதய் மிகுந்த மன வேதனையில் இருந்தார்.
தன்னுடைய காதல் மனைவியின் இழப்பை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இந்நிலையில் நேற்று காலை அவர் திடீரென தன்னுடைய இரு குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பின்னர் வீட்டின் சுவரில் ஐ லவ் யூ ஹேமா என்று ரத்தத்தில் எழுதினார்.
இதைத்தொடர்ந்து அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகளின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்தது. மேலும் இது தொடர்பாக அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.