இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று சினிமா ஆக்‌ஷன் காட்சியை நினைவூட்டுவதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இதில் ஒருவர், பாட்டிலும் கண்ணாடி கிளாஸும் கையில் வைத்து கொண்டு சோடாவை ஊற்றி சுழற்றி ஒரு அற்புதமான காட்சியை உருவாக்குகிறார். இவரது பெயர் வெளியாகாதாலும், அவருடைய சோடா தயாரிக்கும் ஸ்டைல் ஒரு ப்ரொஃபெஷனல் பார்டெண்டரை நினைவூட்டும் வகையில் உள்ளது. கண்ணாடி கிளாசில் பால், கோலா, சோடா மூன்றையும் சேர்த்து இந்த ட்ரிங்கை தயாரிக்கும் போது  உருவான வித்தியாசமான ஃபோம்   பார்த்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணியும் அசந்து போனார்.

“டாலி சாய்வாலாவின் உஸ்தாத் வந்தாச்சு!” எனக் கூறும் இந்த வீடியோவில், ஒரே நேரத்தில் பல கிளாஸுகளை கையாலேயே சுழற்றி கலக்குகிறார். ‘டயநமைட் டிரிங்க்’ என சிலர் இதனை பற்றி பயமுறுத்த , மற்றவர்கள் இதைப் பருகினால் சூப்பர்பவர்ஸ் கிடைக்கும் என கலாய்த்து வருகின்றனர்.

ஆனால் இந்த பால்+கோலா கலவையை மேற்கிழக்கு இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் பழங்காலமாகவே பருகப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் “இந்த மாதிரி எங்களுக்குப் பக்கத்தில் சோடா விக்கிறவங்க இருந்தா, நாங்க டாப்பர்தான்!” என நெட்டிசன்கள்  கமெண்ட் செய்து வருகிறார்கள்.