தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இவர் தற்போது பாலிவுட்டில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் தற்போது வெளிவந்த சிட்டாடல் வெப் சீரிஸ் ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது.

அதனைத் தொடர்ந்து அடுத்து ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு திரை உலகில் ராம்சரண், அல்லு அர்ஜுன் ஆகிய முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஒரு பேட்டியில் விளம்பர படங்களில் நடிப்பது குறித்து நடிகை சமந்தா கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில்,” நான் சினிமா துறையில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் ஒரு நடிகர் அல்லது நடிகை எத்தனை பிராண்டுகளின் அம்பாசிடராக இருக்கிறார் என்பதை வைத்து அவர் வெற்றிகரமான நடிகராக கருதப்பட்டார். அதனால் நானும் அப்போது நிறைய மல்டி நேஷனல் ப்ராடக்ட்ஸ்களுக்கு பிராண்ட் அம்பாசிட்டராக இருந்தேன்.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு உடல் ரீதியாக ஏற்பட்ட சில பிரச்சனைகளில் இருந்து அது போன்று மல்டி நேஷனல் விளம்பரங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறேன். இப்பொழுதெல்லாம் ஒரு பொருளை விளம்பரப்படுத்துவதற்கு முன்பாக  3 மருத்துவர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே விளம்பர படங்களில் நடிப்பதற்கு ஒப்புதல் வழங்குகிறேன்.

இதேபோன்று சென்ற ஆண்டு கூட 15 மிகப்பெரிய பிராண்டுகள் என்னை தேடி வந்த போதும் நோ சொல்லி இருக்கிறேன். அந்த விளம்பர படங்களில் நடித்திருந்தால் கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து இருப்பார்கள். ஆனால் அது பற்றி எல்லாம் எனக்கு வருத்தம் இல்லை. என கூறினார்.