திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் விஜயகுமார் என்பவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏவாக இருந்துள்ளார். இவர் அதிமுக செயலாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இவர் பாஜக சார்பாக நடத்தப்பட்ட மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து  கையெழுத்திட்டார். இது அதிமுக கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதிமுகவின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கு முரணான வகையில் அவர் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கி வைப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதற்கு முன்னாள் எம்எல்ஏ விளக்கம் அளித்துள்ளார். மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் வலியுறுத்தியதால் மட்டுமே கையெழுத்து இட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேச உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.