
தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் அபிராமி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அபிராமி பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுடன் விருமாண்டி படத்தில் நடித்த பிறகு சினிமாவை விட்டு கிட்டத்தட்ட 10 வருடங்கள் விலகி இருந்த நடிகை அபிராமி தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் அபிராமி 10 வருடங்கள் சினிமாவை விட்டு ஏன் விலகினேன் என்ற காரணத்தை தற்போது கூறியுள்ளார்.
அதாவது 15 வயதில் நடிக்க வந்த நான் 21 வயது வரை விடாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். நான் பள்ளி படிப்பை கூட சரியாக முடிக்கவில்லை. என்னால் ஒரு சராசரி பெண்ணாகவும் வாழ முடியவில்லை. இதனால் எனக்கு சற்று இடைவெளி தேவைப்பட்டது. சினிமாவை விட்டு 10 வருடங்கள் விலகி இருந்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மேலும் அது நான் யோசித்து எடுத்த முடிவு தான் என அபிராமி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.