
அதிமுகவினுடைய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டமானது, அதிமுக தலைமை அலுவலகமாக இருக்கக்கூடிய எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் போது பேசிய அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த கூட்டத்தில் பேசும்போது எடப்பாடி இரண்டு விஷயங்களை தெரியப்படுத்தியிருக்கிறார். ஒன்று, எந்த காரணத்திலும் பிஜேபியுடன் இனி அதிமுக கூட்டணி அமைக்கது என்பதை நீங்கள் பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்பதை அழுத்தமாக தெரிவித்துள்ளார்.
வருகின்ற 40 நாடாளுமன்ற தொகுதியில் நாம் வெற்றி பெற்றால் தான் மத்தியில் அமையும் ஆட்சியை நாம் தீர்மானிப்போம் என்று அவர் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் கடுமையாக பணி செய்து நாம் வெற்றி பெற்றாக வேண்டும். குறிப்பாக வருகின்ற நாடாளுமன்ற தொகுதியானது அதிமுகவுக்கு மிகுந்த சவால் நிறைந்த தேர்தலாக இருக்கும். இந்த தேர்தலை பொருத்தவரைக்கும் நாம் 40 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெற வேண்டும்.
நீங்கள் கடுமையான உழைப்பை போடுங்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான ஒரு வலுவான கூட்டணியை நாங்கள் அமைக்கும் முயற்சியில்ஈடுபட்டு வருகின்றோம்.எனவே கூட்டணி குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன்.
நீங்கள் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய வேலையை மட்டும் பாருங்கள். கூட்டணிக்கு இந்த இடம் கொடுக்க போறோம், கூட்டணிக்கு அந்த இடம் கொடுக்க போறோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டாம். 40 தொகுதிகளிலும் நாம்தான் நிக்கிறோம் என்று தேர்தல் வேலையை பாருங்க. குறிப்பாக பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றால் மட்டும் தான் தமிழகத்திற்கு தேவையான உரிமைகளை நாம் பெற்று தர முடியும். எனவே அது தொடர்பாக அனைவரும் கடுமையாக உழைத்து, 40 தொகுதிகளும் நீங்கள் வெற்றி பெற்று தாருங்கள் என்று எடபப்டி பழனிச்சாமி கூறி இருக்கின்றார்.