
சிங்கப்பூரில் டான் சியாங் லாங் (37) என்றவருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டத்தோடு, அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார். ஆனால் சிங்கப்பூர் சட்டப்படி, திருமணமாகி 3 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த பின்னரே விவகாரத்திற்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் இவர்களுக்கு திருமணமாகி 1 வருடமே ஆகியுள்ளது.
இந்நிலையில் டான் சியாங்கிற்கு உடனடியாக விவாகரத்து ஆக வேண்டும் என்று எண்ணத்தில், வேறு ஏதும் வழி உண்டா என்று அவரது வழக்கறிஞரிடம் கேட்டார். அப்போது உங்களது மனைவி ஏதேனும் கிரிமினல் குற்றத்தில் ஈடுபட்டால் விவாகரத்து கிடைக்கும், அவருக்கு தூக்கு தண்டனையும் கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.
உடனே டான் சியாங் கஞ்சாவை வாங்கி, தன்னிடம் இருந்த மற்றொரு சாவியை பயன்படுத்தி தனது மனைவியின் காரில் வைத்தார். ஆனால் காரின் அருகில் டான் சுற்றிக் திரிந்ததை, அவர் வைத்திருந்த கேமரா ஆப் மூலம் நோட்டிபிகேஷன் அவரது மனைவிக்கு சென்றுள்ளது. இதனால் அவர் பார்க்கிங் ஏரியாவுக்கு பார்த்த போது டான் அங்கிருந்த தப்பித்தார்.
இதுகுறித்து அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் டானை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் தனது மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு உள்ளதா என்று பார்க்க காரின் அருகில் சென்றேன் என்று தெரிவித்தார்.
அப்போது நடந்த விஷயத்தை தனது முன்னாள் காதலி இடம் டெலிகிராமில் தெரிவித்துள்ளார். அப்போது அவர், காரில் வைத்த கஞ்சா பாக்கெட்டை உடனடியாக எடுத்து விடுங்கள் என்று அறிவுறுத்தினார். அதனால் டான் காரில் வைய்த்த கஞ்சாவை எடுக்க சென்றார். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் இவரின் செயலை கவனித்து, அவரது காரை சோதனை செய்த காவல்துறையினர் 216.17 கிராம் கஞ்சா இருப்பதை கண்டெடுத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்த போது, டான் தான் குற்றம் செய்தவர் என்று விசாரித்தனர். மேலும் இவருக்கு கடந்த 29-ம் தேதி 3 வருடம் மற்றும் 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.